இஸ்லாமிய கேள்வி பதில்கள்
வினா விடை 1. குர்ஆன் ஷரீஃப் எந்த மொழியில் அருளப்பட்டது ?? குர்ஆன் ஷரீஃப் அரபு மொழியில் அருளப்பட்டது 2. மற்ற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ?? மற்ற வேதங்கள் உலகிற்கு ஒரே சமயத்தில் மொத்தமாக இறக்கப்பட்டது ஆனால் குர்ஆன் மட்டும் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக உலகிற்கு இறக்கப்பட்டது 3. மற்ற வேதங்களை நாம் பின்பற்றலாமா ?? கூடாது அல்குர்ஆன் வந்தவுடன் மற்ற வேதங்கள் அனைத்தும் பின்பற்றப்படும் தகுதியை இழந்துவிட்டன 4. குர்ஆன் ஷரீப் முதல்முதலில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த இடத்தில் எந்த வயதில் அருளப்பட்டது ?? நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நாற்பதாம் வயதில் ஹிரா என்னும் மலைக் குகையில் அருளப்பட்டது 5. குர்ஆன் ஷரீப் எத்தனை ஆண்டுகளில் இறக்கப்பட்டது?? 22 ஆண்டுகள் 5 மாதங்கள் 14 நாட்களில் இறக்கப்பட்டது 6. முதன்முதலில் இறங்கிய திருவசனம் எது ?? இக்ரஃபிஸ்மி என்று தொடங்கும் 96ம் ஸுராவின் முதல் ஐந்து வசனங்கள் 7. கடைசியில் இறங்கிய திருவசனம் எது ?? ஸுரத்துல் பகராவில் உள்ள ( வத்தகூ யவ்மன் ) என்று தொடங்கும் திருவசனம் 8. குர்ஆன் ஷரீபில் எத்தனை ஜுஸ்வுகள் (