இஸ்லாமிய கேள்வி பதில்கள்

 வினா விடை

1. குர்ஆன் ஷரீஃப் எந்த மொழியில் அருளப்பட்டது ?? குர்ஆன் ஷரீஃப் அரபு மொழியில் அருளப்பட்டது
2. மற்ற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ?? மற்ற வேதங்கள் உலகிற்கு ஒரே சமயத்தில் மொத்தமாக இறக்கப்பட்டது ஆனால் குர்ஆன் மட்டும் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக உலகிற்கு இறக்கப்பட்டது
3. மற்ற வேதங்களை நாம் பின்பற்றலாமா ?? கூடாது அல்குர்ஆன் வந்தவுடன் மற்ற வேதங்கள் அனைத்தும் பின்பற்றப்படும் தகுதியை இழந்துவிட்டன
4. குர்ஆன் ஷரீப் முதல்முதலில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த இடத்தில் எந்த வயதில் அருளப்பட்டது ?? நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நாற்பதாம் வயதில் ஹிரா என்னும் மலைக் குகையில் அருளப்பட்டது
5. குர்ஆன் ஷரீப் எத்தனை ஆண்டுகளில் இறக்கப்பட்டது?? 22 ஆண்டுகள் 5 மாதங்கள் 14 நாட்களில் இறக்கப்பட்டது
6. முதன்முதலில் இறங்கிய திருவசனம் எது ?? இக்ரஃபிஸ்மி என்று தொடங்கும் 96ம் ஸுராவின் முதல் ஐந்து வசனங்கள்
7. கடைசியில் இறங்கிய திருவசனம் எது ?? ஸுரத்துல் பகராவில் உள்ள ( வத்தகூ யவ்மன் ) என்று தொடங்கும் திருவசனம்
8. குர்ஆன் ஷரீபில் எத்தனை ஜுஸ்வுகள் (பகுதிகள்) உள்ளன ?? 30 ஜுஸ்வுகள் ( பகுதிகள் ) உள்ளன
9. குர்ஆன் ஷரீஃபில் எத்தனை ஸுராக்கல் ( அத்தியாயங்கள் ) உள்ளன ?? 114 ஸுராக்கல் ( அத்தியாயங்கள் ) உள்ளன
10. குர்ஆன் ஷரீபில் எத்தனை ஆயத்துக்கள் (வசனங்கள்) உள்ளன ?? 6666 ஆயத்துக்கள் ( வசனங்கள் ) உள்ளன
11. குர்ஆன் ஷரீபில் எத்தனை மன்ஜில்கள் உள்ளன ?? 7 மன்ஜில்கள் உள்ளன
12. குர்ஆன் ஷரீபில் எத்தனை ஸஜ்தா ஆயத்துக்கள் உள்ளன ?? 14 ஸஜ்தா ஆயத்துக்கள் உள்ளன
13. ஸஜ்தா ஆயத்துக்களை ஓதினால் என்ன செய்ய வேண்டும் ?? சஜிதா ஆயத்துக்களை ஊதிய வரும் கேட்ட வரும் ஒழுவுடன் ஒரு ஸஜ்தா செய்யவேண்டும்
14. குர்ஆன் ஷரீபில் எத்தனை ருகூஃகள் ( ஐன்கள் ) உள்ளன ?? 588 ஐன்கள் உள்ளன
15. குர்ஆன் ஷரீபில் எத்தனை சொற்கள் உள்ளன ?? 76,430 சொற்கள் உள்ளன
16. குர்ஆன் ஷரீபில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன ?? 3,26,671 எழுத்துக்கள் உள்ளன
17. ஹிஜ்ரத்திற்கு முன் இறங்கிய ஸுராக்கல் எத்தனை ?? 83 ஸுராக்கள் . இதற்கு சூரத்துல் மக்கியா என்று சொல்லப்படும்
18. ஹிஜ்ரத்திற்கு பின் இறங்கிய சூராக்கள் எத்தனை ?? 31 சூராக்கள் இதற்கு சூழலில் மதணிய்யா என்று சொல்லப்படும்
19. குர்ஆன் ஷரீபில் பெரிய சூரா எது ?? சூரத்துல் பகரா
20. குர்ஆன் ஷரீபில் பெரிய ஆயத்து எது ?? அல்பகரா சூராவில் யா அய்யுஹல்லதீன என்று தொடங்கும் 282 ஆவது ஆயத்தாகும்
21. குர்ஆன் ஷரீபில் சிறிய சூரா எது ?? ஸுரத்துல் கவ்ஸர் ( 108 வது ஸுரா )
22. குர்ஆன் ஷரீபில் மீம் இல்லாத சூரா எது ?? சூரத்துல் கவ்ஸர் ( 108வது சுறா )
23. ஆயத்துல் குர்ஸி எந்த ஜுஸ்வில் வருகிறது ?? 3 ஆம் ஜுஸ்வின் ஆரம்பத்தில் வருகிறது
24. யாசீன் எந்த ஜுஸ்வில் வருகிறது ?? 22 ஜுஸ்வின் கடைசியில் வருகிறது
25. ஆமனர் ரஸூலு எந்த ஜுஸ்வில் வருகிறது ?? சூரத்துல் பகராவின் கடைசி யில் வருகிறது
26. குர்ஆன் ஷரீபில் தாய் என்று கூறப்படும் சூரா எது ?? ஸூரத்துல் ஃபாத்திஹா
27. குர்ஆன் ஷரீபின் இதயம் என்று கூறப்படும் சூரா எது ?? ஸூரத்து யாஸீன்
28. குர்ஆன் ஷரீபிற்கு வேறு பெயர்கள் இருக்கின்றனவா ?? ஆம் 56 பெயர்கள் இருக்கின்றன
29. குர்ஆன் எப்போது ஒன்று சேர்த்து எழுதப்பட்டது ?? ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அவர்களின் காலத்தில்
30. குர்ஆன் ஷரீப் யாருடைய யோசனையால் ஒன்று சேர்த்து எழுதப்பட்டது ?? ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அவர்களின் யோசனையால்
31. குர்ஆன் ஷரீபை ஒன்று சேர்த்து எழுதியவர் யார் ?? ஹழ்ரத் ஜைதுப்னு ஸாபித் ரலியல்லாஹு அவர்கள்
32. காத்திபுல் வஹி என்று அழைக்கப்பட்டவர் யார் ?? ஹஜ்ரத் ஜைதுப்னு ஸாபித் ரலி அவர்கள்
33. குர்ஆன் ஷரீப் எந்த மாதத்தில் அருளப்பட்டது ?? ரமலான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது
34. குர்ஆன் ஷரீப் யாருக்கு நேர்வழி காட்டும் ?? குர்ஆன் ஷரீபின்படி அமல் செய்பவருக்கு நேர்வழி காட்டும்
35. குர்ஆன் ஷரீபை ஒழு இல்லாமல் தொடலாமா ?? தொடவே கூடாது
36. குர்ஆன் ஷரீபை முழுமையாக பின்பற்றி நடந்த உத்தமர் யார் ?? முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
37. குர்ஆன் ஷரீபை மனனம் செய்தவருக்கு பெயர் என்ன ?? ஹாஃபிழுல் குர்ஆன்
38. குர்ஆன் ஷரீபின் திறவுகோல் எது ?? பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
39. ஃபாத்திஹா சூராவில் எத்தனை ஆயத்துகள் உள்ளன ?? ஏழு ஆயத்துக்கள் உள்ளன
40. குர்ஆன் ஷரீபின் கடைசி சூரா எது ?? சூரத்துன் நாஸ்

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil