(816) குடியரசு தினமும் சமூக நல்லிணக்கமும் ********************************************************************* தாயின் கருவறையில் இருந்து தரையில் கால் தடம் பதித்தது முதல் மன்னறை சென்றடையும் வரை யாருக்கும் அடிமைப் பட்டு முடங்கிடாமல் முழு சுதந்திரமாக வாழ வேண்டும். ஆட்சி தலைவருக்கு கட்டுப் படவேண்டும்..உரிமைகள் பறிக்கப் படுமானால் பொங்கி எழ வேண்டும். கூட்டாக-பன்மை சமூகமாக வாழும்போதும் இறைகொள்கை / வணக்க வழி பாடுகளில் வளைந்து கொடுக்க கூடாது..ஆனாலும் இறை கொள்கை / வணக்கம் தவிர உள்ள பிற விஷயங்களில் மற்றவர்களை கண்டிப்பாக அரவணைத்து அனுசரித்து வாழ வேண்டும். عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً وَاللّٰهُ قَدِيْرٌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 60:7) 1 . @@@@@@@@@ குடியரசு என்றால் ? குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள்