துஆ - உடல் வலி நீங்க சுகம் பெற
#துஆ - உடல் வலி நீங்க சுகம் பெற #DUA for Relieve Body Pain & Good Health وعن عثمان بن أبي العاص أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم وجعا يجده في جسده فقال له رسول الله صلى الله عليه وسلم : " ضع يدك على الذي يألم من جسدك وقل : بسم الله ثلاثا وقل سبع مرات : أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر " . قال : ففعلت فأذهب الله ما كان بي . رواه مسلم உஸ்மான் பின் அபில்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள். நான் ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடல் வலியை முறையிட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு வலி உள்ள இடத்தில் உன் கையை வைத்து بِسْمِ اللَّهِ பிஸ்மில்லாஹ் என்று மூன்று தடவையும் أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று ஏழு தடவையும் ஓதி வர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நான் அவ்வாறு செய்தேன் எனக்கு இருந்த உடல் வலியை அல்லாஹ் முற்றிலும் போக்கி குணமக்கினான். எனவே என் குடும்பத்தார் & மற்றவர்களையும் இவ்வாறு செய்யும்படி ஏவிக் கொண்டிருக்கிறேன். அறிவிப்பபாளர்: உஸ்மான் பின் அபில்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல் : #அபூதாவூத் 3393 & ஸஹீஹ் #முஸ்லிம் 4082
Comments
Post a Comment