ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்
ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் ஷஃபான் மாதத்தில் நோன்பு ஷஃபான் மாதம் ஷஃபான் நோன்பு ஷஃபான் உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது. ஷாபான் - ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்! இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள்! இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன! இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்! (நூல் : சுனன் நஸயீ : 2357)