மிஃராஜ் நோன்பு உண்டா | மிஃராஜ் பயான் | மிஃராஜ் நோன்பு இருக்கா இல்லையா ?

மிஃராஜ் நோன்பு உண்டா ?
மிஃராஜ் நோன்பு இருக்கா இல்லையா ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே 

ரஜப் மாதத்தில் 27ஆம் பிறை அன்று மிஃராஜ் இரவுக்கு அடுத்த நாள் நோன்பு வைப்பதென்பது மார்க்கத்தில் இல்லாத ஓரு செயலாக இருக்கிறது 

மிஃராஜுடைய இந்த நாளில் மக்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விண்வெளி பயணத்தை ரசூலுல்லாஹ் உடைய இந்த உயர்தரமான அத்தாட்சியை மக்களிடத்தில் பயானாக உலமாக்கள் பேசுவார்கள் அதே இரவில் திக்ரு செய்து துவாவும் நடைபெறும் ஆனால் மறுநாள் மிஃராஜுடைய நோன்பு என்பது மார்க்கத்தில் இல்லை 

ஆனால் இந்த நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் மற்ற மாதங்களைப் போல் நஃபில் நோன்புகளை வைத்துக் கொள்ளலாம் அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தை சரியாக வழங்கச் செய்வானாக 
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 

👉
 மிஃராஜ் இரவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் மூன்று பரிசுகளை வழங்கினான் 

1. ஐநேர தொழுகை 
2. சூரத்துல் பகராவின் இறுதி இரண்டு ஆயத்துக்கள்
3. இணை வைக்காதவர்களுக்கு மன்னிப்பு 
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள் 
ஜஸாகல்லாஹ் கைர் 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

தங்கள் துஆவை எதிர்பார்த்தவனாக
முஃப்தி அப்துர் ரகீப் மழாஹிரி 

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil